கடந்த 2019ஆம் ஆண்டில் கனடிய தமிழர்கள் மத்தியில் பெருமையாக பேசப்பட்ட ஒரு பெயர் மைத்திரேயி ராமகிருஷ்ணன்.
இவர் “Never Have I Ever” எனப் பெயரிடப்பட்டுள்ள 10 அத்தியாயங்களைக் கொண்ட தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
கனடிய தமிழரான மைத்திரேயி ராமகிருஷ்ணன் 17 வயதான உயர் நிலைப் பாடசாலை மாணவியாவார்.
முதலாம் தலை முறை இந்திய அமெரிக்க இளம் பெண் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
பலருக்கும் எட்டாக்கனியாக உள்ள Hollywood தயாரிப்பான இத் தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது கனடிய தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை பெருமையான விடயமாகும்.
எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளரான Lang Fisher மற்றும் நகைச்சுவை நடிகை மற்றும் எழுத்தாளரான Mindy Kaling ஆகியோரின் புதிய தொடரில் மைத்திரேயி ராமகிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கத் தெரிவானார்.
தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த Kaling இந்திய-தமிழ் மற்றும் பெங்காலி பின்னணியைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல தமிழ்க் கனடியர்களைப் போலவே, இவரும் இலங்கையின் போரிலிருந்து தப்பி கனடாவுக்கு அகதிகளாக வந்த ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர்.
இவரது தந்தையானராம் செல்வராஜா மற்றும் தாயான கிருத்திகாகுலேந்திரன் ஆகியோர் கனடிய சமூகத்தில் அறியப்பட்டவர்கள்.
இவர்கள் இருவரும் தேர்தல் அரசியலிலும் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர்கள். ஆனாலும் தமது அரசியல் விருப்பு வெறுப்புகளை தமது குழந்தைகள் மீது திணிப்பது தவறு என்ற எண்ணம் கொண்டவர்கள்.
மைத்திரேயி ராமகிருஷ்ணன் தான் நடிக்கும் தொடர் குறித்த விளம்பரங்களில் தன்னை ஒரு கனடிய தமிழர் என அடையாளம் காட்டுவதை வலியுறுத்தியுள்ளார்.