சிரியாவில் எரிபொருள் டேங்கர் குண்டு வெடிப்பில் குறைந்தது 40 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துருக்கியின் ஆதரவு எதிர்க்கட்சி போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் வடக்கு சிரிய நகரான அஃப்ரின் வீதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் மேலும் 47 பேர் காயமடைந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது
உடனடியாக இத்தாக்குலுக்கு யாரும் பொறுப்பு கோரப்படவில்லை, ஆனால் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படைகள் (YPG) மீது துருக்கி குற்றம் சாட்டியது.
1984 முதல் துருக்கிக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சியை நடத்திய சட்டவிரோத குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (பி.கே.கே) சிரிய பிரிவு தான் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படைகள் (YPG) என்று துருக்கி குற்றம் சாட்டியது.
அங்காரா மற்றும் பல மேற்கத்திய நாடுகளால் பி.கே.கே ஒரு பயங்கரவாத குழு” என்று கருதப்படுகிறது.
செவ்வாயன்று நடந்த குண்டுவெடிப்பில் வாகனங்களுக்குள் சிக்கிக்கொண்டவர்கள் உட்பட பலர் எரிந்தனர் என்று சிரிய ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
https://twitter.com/msugurbas/status/1255184755890565120
ஒரு மருத்துவமனை முற்றத்தில், 10 எரிந்த உடல்கள் ஆம்புலன்ஸ்களுக்கு அடுத்ததாக போர்வைகளால் மூடப்பட்டிருந்தன. அருகிலுள்ள ஆம்புலன்சில், இரண்டு எரிந்த உடல்கள் உள்ளே இருந்தன என்று ஆர்வலர்கள் பரப்பிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் காட்டுக்கின்றன.
குண்டுவெடிப்பில் பல கார்கள் மற்றும் கடைகளை தீ பிடித்து எரிந்தன. இதன் காரணமாக இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அஞ்சப்படுகிறது.
இதற்கு மத்தியில், வடக்கு சிரியாவில் ஆர்வலர்கள் அஃப்ரின் பகுதியில் உள்ள மக்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.