அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனா நோயாளிகள் கொத்து கொத்தாக மரணமடைவதை பார்த்து மனமுடைந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நியூயார்க்கின் பிரெஸ்பைடீரியன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய மருத்துவர் லோர்னா பிரீனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னர் மருத்துவ பணிக்கு திரும்பியுள்ளார்.
தானும் பிற மருத்துவர்களும் எப்படிப் போராடியும் நோயாளிகளைக் காப்பாற்ற முடியாமல் கண்ணெதிரே அவர்கள் உயிர்ப்பிரிவதை தன்னால் தாங்க முடியவில்லை என்று அவர் பலமுறை தந்தையிடம் கூறி அழுதுள்ளார்.
இவரது மனவேதனையை புரிந்து கொண்ட நிர்வாகம் வீட்டுக்கு செல்லுமாறு கூறியது, இதனையடுத்து அம்மா, சகோதரியுடன் வாழ்ந்து வந்தாலும் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று லோர்னா பிரீனே தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மன உளைச்சலால் 300 மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.