கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவனான பமுதிதா பிரேமச்சந்திரா தான் கண்டுபிடித்த மருத்துவ ரோபோ இயந்திரத்தை இன்றையதினம் (29) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.
இந்த ரோபோ 200 நோய்களைக் கண்டறிந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. தொற்றுநோய்களின் போது பயன்படுத்துவதற்காக இந்த ரோபோவை மேலும் மேம்படுத்த அரசு பரிந்துரை செய்துள்ளது.
ரோபோ சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் பதிலளிக்கும் திறன் கொண்டது.
Pamuditha Premachandra, inventor of the #Robot (Nextbots) that functions as an assistant to health workers & has the ability to diagnose ailments & provide advise, presented his invention to me. I instructed officials to examine the possibility to use it in the current situation. pic.twitter.com/Ig9B6KfWn2
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) April 29, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டரில் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது
மருத்துவ சேவையாளர்களுக்கு உதவி புரியும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இது மேலும் மேம்படுத்தப்பட்டு சுகாதார ஊழியர்களின் சேவைக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.





















