இலங்கையில் இணைய தளங்களின் ஊடாக பொருட்களை விநியோகம் செய்வதாக தெரிவித்து பொதுமக்களின் கடனட்டை தரவுகள் திருடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
“இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் போலி இணையத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
இந்நிலையில், அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத அவ்வாறான இணையத்தளங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், பொருட்களை விநியோகிப்பதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட முயன்ற சில போலி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















