யுத்த வெற்றிச் சின்னங்களை காட்சிப்படுத்தி யுத்த வெற்றி விழாக்களை நடாத்தினால் நாங்களும் எங்களது போராட்ட வெற்றிச் சின்னளை வைத்து வெற்றி விழாக்களை நடாத்த முடியும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஐிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆகையினால் அந்த நிலைமைக்கு எங்களை நிர்ப்பந்திக்க வேண்டாமென்றும் இதனை நினைவில் வைத்துக் கொண்டு யுத்த வெற்றி விழாக்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் செயற்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.கே. சிவாஐிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.