முழங்காவில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்த நேற்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேற்படி பெண் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி தென்னிலங்கை பகுதியிலிருந்து முழங்காவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டவர். அவருடைய சகோதரனுக்கு கொரோனா தொற்று ஏப்ரல் 13 அன்று உறுதிப்படுத்தபட்டவர்.
ஏனைய பரிசோதனைக்கு உட்பட்ட 75 பேருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டது.
இன்று 76 பேருக்கான COVID – 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
- போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் – 9 பேர்.
- போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 7 பேர்.
- ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை – ஒருவர்.
- வவுனியா பொது வைத்தியசாலை – 3 பேர்.
- முல்லைத்தீவு பொது வைத்தியசாலை – ஒருவர்.
- முல்லைத்தீவு வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர்.
- முல்லைத்தீவு புதுமாத்தளன் தனிமைப்படுத்தல் நிலையம் – 54 பேர் கடற்படையினர். வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவருக்கு 26 ஏப்ரல்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் 21 ஏப்ரல் முல்லைத்தீவு பதவிசிரிபுர நோக்கி பயணித்த ஏனைய படைவீரர்கள் புதுமாத்தளனில் தனிமைப்படுத்தப்பட்டனர்.