கரோனா வைரஸின் தாக்கமானது உலகம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தடுப்பு மருந்து கண்டறியும் பணிகளை தொடர்ந்து உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது.. இந்த மருந்துகளில் சோதனை முன்னேற்றம் அடைந்துள்ளதால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கரோனா வைரஸை ரெம்டெசிவிர் என்ற மருந்து கட்டுக்குள் வைக்கும் என்று, அமெரிக்காவின் கலிபோர்னியா கிலியட் மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விஷயம் குறித்து அந்நிறுவனம் சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மறுத்து நல்ல பலனை அளித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதல் ஐந்து நாட்கள் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டதை அடுத்து, இரண்டே வாரத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் குணமாகியுள்ளனர். ரெம்டெசிவிர் மருந்தில் மூன்றாவது பரிசோதனை இறுதியானதாகும். இந்த மருந்திற்கான அனுமதியை பெரும் கட்டம் விரைவில் வரவுள்ளது.
இதற்கான ஆய்வு முடிவுகளை தேசிய அலர்ஜி மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனம் மதிப்பிடு செய்துள்ள நிலையில், கிலியட் நிறுவனத்தின் மருந்து 31 விழுக்காடு கூடுதல் பலனை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெம்டெசிவிர் மருந்தால் நோயாளி 11 நாட்களில் குணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாத என்ற ஆய்வுகள் உறுதியானால், இந்த மருந்தை அணைத்து பகுதியிலும் உபயோகம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.