வரவிருக்கும் அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற கூடாது என்பதற்காகவே சீனா இதனை செய்து இருக்கும்… டிரம்ப் குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் சீனா ஆய்வகம் ஒன்றில் இருந்து தான் வந்தது என்பதில் தனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் சீனா இதை தெரியாமல் செய்த தவறா? அல்லது சீனா வேண்டுமென்றே செய்ததா? என்று கூற எனக்கு அனுமதி இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனா மீது உலக சுகாதார அமைப்பில் அடுக்கு அடுக்காக குற்றச்சாட்டுகளை டிரம்ப் வைத்துள்ளார். ஆனால் அவர் இவ்வாறு குற்றச்சாட்டுகளை வைப்பது முதல் முறையல்ல.
வரவிருக்கும் அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றுவிட கூடாது என்பதற்காக சீனா என்னவேண்டுமானலும் செய்யும் என்றும் அதற்கு கொரோனா பரவலை தடுக்காதது ஒரு காரணம் என்றே கூறலாம் என டிர்ம்ப் தெரிவித்துள்ளார்
அதேபோல சீனா ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்று தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் ஏற்கனவே குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார்.
ஆனால் தற்போது இது முன்னாடி இருந்த ஒரு ஆய்வகத்தில் இருந்து தான் பரவியது தான் என்று அழுத்தமாக தெரிவித்துள்ளார் அதிபர் டிரம்ப்.
மேலும் சீனாவிற்கு ஆதாரவாக செயல்படுவதற்கு உலக சுகாதார நிலையம் வெட்கப்பட வேண்டும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில் வைரஸ் சரியாக எந்த இடத்தில் இருந்து பரவியது என்பது குறித்து இன்னும் விசாரணை நடத்திவருவதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அவர் பல விடயங்களை குறித்த காணொளியில் பேசியுள்ளார்…வரவிருக்கும் அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற கூடாது என்பதற்காகவே சீனா இதனை செய்து இருக்கும்… டிரம்ப் குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் சீனா ஆய்வகம் ஒன்றில் இருந்து தான் வந்தது என்பதில் தனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் சீனா இதை தெரியாமல் செய்த தவறா? அல்லது சீனா வேண்டுமென்றே செய்ததா? என்று கூற எனக்கு அனுமதி இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனா மீது உலக சுகாதார அமைப்பில் அடுக்கு அடுக்காக குற்றச்சாட்டுகளை டிரம்ப் வைத்துள்ளார். ஆனால் அவர் இவ்வாறு குற்றச்சாட்டுகளை வைப்பது முதல் முறையல்ல.
வரவிருக்கும் அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றுவிட கூடாது என்பதற்காக சீனா என்னவேண்டுமானலும் செய்யும் என்றும் அதற்கு கொரோனா பரவலை தடுக்காதது ஒரு காரணம் என்றே கூறலாம் என டிர்ம்ப் தெரிவித்துள்ளார்
அதேபோல சீனா ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்று தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் ஏற்கனவே குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார்.
ஆனால் தற்போது இது முன்னாடி இருந்த ஒரு ஆய்வகத்தில் இருந்து தான் பரவியது தான் என்று அழுத்தமாக தெரிவித்துள்ளார் அதிபர் டிரம்ப்.
மேலும் சீனாவிற்கு ஆதாரவாக செயல்படுவதற்கு உலக சுகாதார நிலையம் வெட்கப்பட வேண்டும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில் வைரஸ் சரியாக எந்த இடத்தில் இருந்து பரவியது என்பது குறித்து இன்னும் விசாரணை நடத்திவருவதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அவர் பல விடயங்களை குறித்த காணொளியில் பேசியுள்ளார்…