கனடாவில் தாக்குதல் பாணி துப்பாக்கிகள் தடை செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ 1,500 வகையான தாக்குதல் பாணி துப்பாக்கிகளை தடை செய்வதாகவும், இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கனடா போராடி வரும் நிலையில், தற்போது தாக்குதல் பாணி துப்பாக்கிகளை தடை செய்வதாக அறிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கனடாவில் தாக்குதல் பாணி துப்பாக்கிகளைத் தடை செய்வோம் என்று நாங்கள் கூறினோம்.
இன்று நாங்கள் அதைச் செய்கிறோம், நாடு முழுவதும் துப்பாக்கி கட்டுப்பாட்டை வலுப்படுத்த எடுக்கும் நடவடிக்கையாக இதை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
We said we’d ban assault-style firearms in Canada, and today we’re doing exactly that. Watch live as Minister @BillBlair and I announce the steps we’re taking to strengthen gun control across the country: https://t.co/qshNT9RXwW
— Justin Trudeau (@JustinTrudeau) May 1, 2020
இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு வரும், நாட்டில் இராணுவ தர தாக்குதல் ஆயுதங்களை வாங்கவோ, விற்கவோ, கொண்டு செல்லவோ, இறக்குமதி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ இனி அனுமதிக்கப்படாது.
அதாவது 1,500 வகையான தாக்குதல் பாணி துப்பாக்கிகள் தடை செய்யப்படுவதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் உட்பட, தடை செய்யப்பட வேண்டிய துப்பாக்கிகளின் வரைவு பட்டியலையும் தயார் செய்துள்ள பாதுகாப்பு அமைச்சர், இந்த துப்பாக்கிகளைத் தடை செய்வதன் மூலம் கனடா மக்களின் உயிர்களைக காப்பாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று முதல், உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்கள், நாட்டில் இந்த வகையான ஆயுதங்களை விற்கவோ, கொண்டு செல்லவோ, இறக்குமதி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ இனி அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இன்றைய நிலவரப்படி, கனடாவில் தாக்குதல் ஆயுதங்களுக்கான சந்தை மூடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் Bill Blair கூறியுள்ளார்.
இந்த துப்பாக்கிகளை ஏற்கனவே வைத்திருக்கும் நபர்கள் தடைக்கு இணங்க அனுமதிக்க இரண்டு ஆண்டு பொது மன்னிப்பு காலம் இருக்கும்.
அதுமட்டுமின்றி தடை செய்யப்படும் துப்பாக்கிகளை வைத்திருக்கும் மக்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதற்காக வரும் மாதங்களில் சட்டத்தை இயற்றுவதாக ஜஸ்ட்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் இருந்து ஒரு ஆணைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் மூலமாக இந்தத் தடை அமல்படுத்தப்படும் எனவும் சட்டத்தின் மூலமாக அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து கனேடியர்களும் ஏப்ரல் 2022-ஆம் ஆண்டிற்குள் இந்த விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். அப்படி விதிமுறைகளை மீறினால், துப்பாக்கி உரிமையாளர்கள் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், ரேடியோ-கனடா தடை செய்யப்பட்ட 15000 துப்பாக்கிகளின் பட்டியலுக்கான ஆரம்ப வரைவை வெளியிட்டுள்ளது. அதில், M16, M4, AR-10 மற்றும் AR-15 துப்பாக்கிகள் போன்ற துப்பாக்கிகள் தடை செய்யப்படும். Mini-14-ம் இந்த பட்டியலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இது பற்றிய முழு பட்டியல் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இந்த துப்பாக்கித் தடை நோவா ஸ்கோடியா துப்பாக்கி சூடு சம்பவத்தின் இரண்டு வாரங்களுக்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.