பிரித்தானியாவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது, பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தால், அபராதம் விதிக்கப்படலாம் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் சுட்டிக் காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஜுன் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என்று தான் நினைப்பதாக நேற்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியிருந்தார்,
அதுமட்டுமின்றி அடுத்த வாரம் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவருவது குறித்த விரிவான திட்டம் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், கொரோனாவில் இருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாப்பதற்காக பெற்றோர் சிலர் விரும்புதாகவும், இதனால் அவர்கள் பள்ளிக்கு அனுப்புவது குறித்து யோசிப்பதாகவும் கூறப்பட்டது.
இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதற்கான திட்டவட்டமான திகதி இன்னும் இல்லை என்றாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் சேர்ந்து இருப்பதால் கொரோனா ஆபத்து ஏற்படலாம் என்று நினைப்பதால், அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படுமா என்ற கேள்வி சுகாதார செயலாளர் Matt Hancock முன் இன்று வைக்கப்பட்டது.
மாணவர்கள் பள்ளிக்கு செல்வது பாதுகாப்பானது என்றால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் பாதுகாப்பு இல்லை என்று உறுதியானால், நாங்கள் அதை மீண்டும் திறக்கப்போவதில்லை.
நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனெனில் அது பாதுகாப்பாக இருக்கும்போது மட்டுமே நாங்கள் செய்வோம், அந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது முற்றிலும் நியாயமானதாகவும் இயல்பானதாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், Matt Hancock அபராதம் விதிக்கப்படுவதை மறுக்காததால், இந்த விஷயத்தில் அபராதம் விதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.