வவுனியா செட்டிகுளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞரொருவரை கசிப்பு உற்பத்திக்கான பொருட்களுடன் கைது செய்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை செட்டிகுளம் பெரியகுளம் 10 ஆம் கட்டை பகுதியில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் சிலர் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரதம பொலிஸ் பரிசோதகர் பிரதீப்குமார் தலைமையிலான பொலிஸ்குழு சோதனையில் ஈடுபட்டபோதே குறித்த பொருட்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 54 ஆயிரம் மில்லிலீற்றர் கோடாவும் 3 போத்தல் கசிப்பு மற்றும் பரல்களுடன் வீரபுரத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனையும் கைது செய்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் தொடர்ந்தும் செட்டிகுளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியை பொலிஸார் முறியடித்து வருவதாகவும் தெரிவித்தனர்.