அலரிமாளிகையில் எதிர்வரும் 4ஆம் திகதியன்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கூட்டம், விளையாட்டுக் கூட்டம் என தெரிவித்திருந்த ஜே.வி.பி. அந்தக் கூட்டத்துக்கு தமது தரப்பினர் செல்லமாட்டார்கள் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், பாராளுமன்றத்தை கூட்டி முடிவெடுப்பதே சரியானதாகும் எனத் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தமது தரப்பும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காது என தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்ற்து.
இதேவேளை இந்த கூட்டத்திற்கு சமூகமளிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.