யாழ்ப்பாணத்தில் கசிப்பு விற்பனை அதிகரித்துவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
தற்போது நாட்டில் ஊரடங்கு அமுலில் உள்ளதால் மதுபான நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிராமங்கள் தோறும் தற்பொழுது கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாஅ கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசிங்க தலைமையில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கோப்பாய் குப்புலாவத்தை பகுதியில் 45லீற்றர் கசிப்பு,150 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய், சாவகச்சேரி, வட்டுக்கோட்டை மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி பெரியளவில் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.