நாட்டில் அமுல்படுத்தப்படுள்ள ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்ட 44 ஆயிரத்து 231 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 11 ஆயிரத்து 460 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடுபூராகவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இதன்போது இடர்வலையங்களைத் தவிர ஏனையப்பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருவதுடன் தற்போதும் நாடுபூராகவும் ஊரடங்கு அமுலில் உள்ளது.
இந்தநிலையில் இடர்வலையங்களைத் தவிர ஏனையப்பகுதிகளுக்கான ஊரடங்கு திங்கட்கிழமை தளர்த்தப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை ஆறாம் திகதி மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 44 நாட்கள் கடந்துள்ள நிலையில் இக் காலப்பகுதியில் அதற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 44 ஆயிரத்து 231 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.