தமிழகத்தில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவருக்கும் சத்யா என்பவருக்கும் ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சின்னகாவனத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கட்டுமான வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இருவருக்குள் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பொன்னேரி காவல்துறையினர் சத்யா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சந்தேகத்தின் பேரில் சத்யா கணவர் அமிர்தலிங்கத்தையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கொரோனா லாக்டவுன் சமயத்தில் நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.