பிரித்தானியாவில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெறவிருந்த இந்திய பெண் செவிலியர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் NHS மருத்துவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். நோய் பரவ துவங்கிய ஆரம்ப கால கட்டத்தில் மருத்துவர்களுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 63 வயது மதிக்கத்தக்க Philomina Cherian என்ற செவிலியர் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை Oxford-ல் இருக்கும் John Radcliffe மருத்துவமனையில் உயிரிழந்தார்.
NHS செவிலியரான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இன்னும் இவர் ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெற முடிவு செய்திருந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளார்.
இவர் குறித்து கணவர் Joseph Varkey கூறுகையில், சிறந்த மனிதர், அக்கறையுள்ள தாய் மற்றும் மனைவியாக இருந்தார். செவிலியர் வேலையை அவள் ஒரு தொழிலாளாக பார்க்கவில்லை, அது அவளுடைய விருப்பமாக பார்த்து வந்ததாக கூறியுள்ளார்.
மேலும் John Radcliffe மருத்துவமனையில், Philomina Cherian செவிலியராக பணியாற்றி இருந்ததால், அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் எங்கள் செவிலியர் குடும்பத்தின் மதிப்புமிக்க நபராக இருந்தாக குறிப்பிட்டுள்ளது.
Philomina Cherian பிரித்தானியாவில் பணியாற்றுவதற்கு முன்பு சவுதி அரேபியாவில் செவிலியராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.