பிரித்தானியாவை சேர்ந்த தாய் ஒருவர் தன்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தன்னுடைய காதலனின் விந்தணுவை ஜுஸ் போன்று மூன்று ஆண்டுகள் தொடர்ந்து குடித்து வருவதால், தனக்கு இதுவரை சளி மற்றும் காய்ச்சலே இல்லை என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸிற்கான சாதரண அறிகுறிகளாக சளி மற்றும் காய்ச்சல் இருக்கிறது.
இதன் காரணமாக சளி, இருமல் தங்களை அண்டாமல் இருப்பதற்கு மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல், கொரோனா ஒரு சிலரை தாக்கி வருகிறது..
இந்நிலையில், பிரித்தானியாவின் Aylesbury-ஐ சேர்ந்த Tracy Kiss என்ற 32 வயது பெண், தன்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக என்ன செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார். ஒரு பயிற்சியாளரான இவருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வித்தியாசமான முறையை கையாண்டு வருகிறேன். ஒரு ரசாயனங்கள் இல்லாத ஒன்றைக் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
இது, ஒரு தாய் தனது பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதே போன்று தான் இதுவும், இதற்கும், அதற்கும் ஒன்று வேறுபாடில்லை.
இது முழு வைட்டமின்களால் நிரம்பியுள்ளது, கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து நான் இதை குடித்து வருகிறேன். எனக்கு சளியோ அல்லது காய்ச்சலோ ஏற்படவில்லை.
அதிக ஊட்டச்சத்துக்களையும் நன்மைகளையும் பெற விந்தணுக்களை உட்கொள்வது நல்லது, ஆனால் நான் இதை ஒரு உறைவிப்பான்(Fridge) ஐஸ் கியூப் தட்டில் சேமித்து வைப்பேன்.
என்னுடை அந்த காதலனின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை, நாங்கள் நீண்ட தூர உறவில் இருக்கிறோம்.
நான் ஒரு சில நேரங்களில் பெர்ரி மற்றும் வாழைப்பழங்களுடன் சேர்ந்து ஒரு ஷேக் போன்று குடித்துள்ளேன். இதை நான் ஒரு சுகாதார கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.
நிறைய பேர் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புதிய வழிகளை முயற்சி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது மிகவும் தாமதமானது என்றே சொல்வேன்.
ஏனெனில், ஒரு நோய்க்கு முன்னர் நீங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக மாற்ற வேண்டும், அதை எதிர்த்துப் போராட முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
உங்களுக்கு தொண்டை புண் இருக்கும்போது தேன் மற்றும் எலுமிச்சை நீரைக் குடிப்பீர்கள், அதுக்கு இதுக்கும் வேறுபாடு இல்லை, இது மற்றொரு இயற்கை தீர்வு, இதற்கு உங்களுக்கு காதலன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
ஒரு ஆரோக்கியமாக இருக்கும் ஒரு ஆண் நண்பரிடம் கேட்கலாம். நான் கேலி செய்கிறேன் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் நான் எனக்கு தெரிந்த விஷயத்தை வெளிப்படையாக கூறுகிறேன்.
நான் ஒரு வித்தியாசத்தை உருவாக்க விரும்புகிறேன், அதனால்தான் இந்த வீட்டு வைத்தியத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விந்தணுக்கள் உட்கொள்வதன் மூலம், நோயை தடுக்கலாம் என்பதற்கான எந்த ஒரு மருத்துவ ஆதாரமும் இல்லை, குறிப்பாக கொரோனா வைரஸ் விஷயத்தில், ஆனால் Tracy Kiss இதை மிகவும் நம்புகிறார், வாரத்திற்கு மூன்று முறை இதை ஜுஸ் போன்று குடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.