கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி, மருதமுனை, சாய்ந்தமருது பகுதியில் இளைஞர்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வீதிகளுக்கு தலைக்கவசம் இன்றி உந்துருளிகளில் பயணித்தல், குழுவாக முகக்கவசம் இன்றி உரையாடுதல் போன்ற செயற்பாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறும் நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக கரையோர பிரதேசங்களான மருதமுனை, கல்முனை கடற்கரைப் பகுதியை அண்டிய பகுதியில் நோன்பு காலங்களில் முக்கிய வீதிகளில் இந்நிலைமைகளை அவதானிக்க முடிகின்றது.
இதனைத் தடுப்பதற்கு பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.
இதேவேளை போலி ஊடக அடையாள அட்டைகளைத் தயாரித்து சில இளைஞர்கள் வீதிகளில் வலம் வரும் சம்பவமும் அதிகரித்துள்ளது.