அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தவிசாளர் உட்பட ஐவர் இன்று (03.05.2020) மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை சோதனை சாவடியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறி அனுமதிப்பத்திரம் இன்றி பயணத்தில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்குரஸ்ஸ பிரதேச சபைக்கு உரித்தான லொறி ஒன்றும் அதிலிருந்த சில பயணப்பொதிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ளது. அத்துடன், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
சிவனொளிபாதமலை உட்பட வணக்கஸ்தலங்களுக்கான யாத்திரைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறனதொரு பின்புலத்திலேயே அனுமதிபத்திரம் இன்றி மாவட்டம் விட்டு மாவட்டம் இவர்கள் வந்துள்ளனர்.
அத்துடன், பாதுகாப்பு தரப்பினரிடம் சிக்காமல் இவர்கள் அக்குரஸ்ஸையிலிருந்து எவ்வாறு மஸ்கெலியா பகுதிக்கு வந்துள்ளனர் என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, சிவனொளிபாதமலைக்கு செல்வதற்காகவே தாங்கள் வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.