மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.


















