லண்டனில் வீட்டை விட்டு வெளியேறிய என்.எச்.எஸ் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 18 மற்றும் 16 வயதுடைய இரண்டு பேர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 26-ஆம் திகதி David Gomoh என்ற 24 வயது இளைஞன், உள்ளூர் நேரப்படி சரியாக 10.25 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறிய சில நொடிகளில் கொடூரமாக குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
NHS ஊழியரான David Gomoh-ன் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், பொலிசார் இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில், Stratford-ஐ சேர்ந்த Muhammad Jalloh என்ற 18 வயது இளைஞனும், Telford-ஐ சேர்ந்த 16 வயது இளைஞனும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, David Gomoh குத்தி காயங்களுடன் காணப்படுவதற்கு சற்று முன்னர், வேறு நபருக்கு எதிராக கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக GBH ஏற்படுத்த சதி செய்து இந்த கொலையை இவர்கள் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் நாளை தேம்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபவுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
David Gomoh, ஒரு செவிலியராக தாயைப் போல, NHS நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவர் NHS ஊழியர்களுக்கு அத்தியாவசிய உபகரணங்களை வழங்க உதவினார்.
30 வயதான அவரின் சகோதரி Lizzie, அவன் ஒரு நல்ல ஆணாக இருந்தான். அவர் எந்த மோசமான செயலிலும் ஈடுபடவில்லை. அவர் தனது சொந்த வியாபாரத்தை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான், இப்படி கொலை செய்யப்பட்டு இறக்கும் அளவிற்கு அவனுக்கு தகுதி கிடையாது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
David Gomoh-ன் தந்தை Ken சமீபத்தில் கொரோனா வைரஸால் இறந்துவிட்டார். மறுநாள் அவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவிருந்த நிலையில், இப்படி நடந்துவிட்டது.
தனது கணவர் மற்று மகனின் மரணத்தால் அவரின் தாயார் மிகுந்த வேதனையில் உள்ளார். அதே போன்று சகோதரியும் அப்பா மற்றும் சகோதரனை இழந்துள்ளதால், இருவரும் மனம் உடைந்து உள்ளனர்.
David Gomoh,NHS-சமூகத்திற்காக கடுமையாக உழைத்தார். முகமூடி அணிந்த ஒரு குழுவினரால் அணுகப்பட்டு, அதன் பின் பல முறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.