எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 11ம் திகதி அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிப்பதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் ஆலோசனை வழிகாட்டல்கள் அடிப்படையில் முழுமையான சமூக இடைவெளி பேணப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
முகக் கவசங்கள் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், கைகளை கழுவுவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் இதுவரை நாட்களும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தாலும் எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது மே 11இல் ஊரடங்கை தளர்த்தல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் ஜூன் 1ம் திகதி பாடசாலை திறக்கப்படவுள்ளது.