தமிழகத்தில் திருமணமான மூன்றாவது நாளிலேயே புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கலை சேர்ந்த சாந்தகுமார் – சம்பூர்ணம் தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் தாய் சம்பூர்ணம் ஆறு மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார்
குடிக்கு அடிமையான தந்தை சாந்தகுமாரும், அதே பகுதியில் பழக்கடை நடத்தி வரும் சங்கர் (45) என்பவரும் நண்பர்கள், எப்போதும் மதுபோதையில் உள்ள சாந்தகுமாரின் குடும்பத்திற்கு அவ்வப்போது தன்னாலான உதவிகளை சங்கர் செய்து வந்துள்ளார்.
45 வயதாகியும் சங்கருக்கு திருமணம் ஆகாத நிலையில், தன் மகள் மகாலட்சுமியை அவருக்குத் திருமணம் செய்து வைக்க சாந்தகுமார் முடிவு செய்துள்ளார். மகளின் எதிர்ப்பையும் மீறி ஏப்ரல் 29 ஆம் திகதி கோவில் ஒன்றில் திருமணம் நடத்தியுள்ளார்.
யாருக்கும் தெரியாமல் சங்கருக்கும் மகாலட்சுமிக்கும் அந்தக் கோயிலில் திருமணம் நடந்தது. திருமணம் ஆன மூன்று நாட்களும் தம்பதி, மணமகள் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் மே 1ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மகாலட்சுமி.
வீட்டிற்கு வந்த கணவர் சங்கர், மனைவி மகாலட்சுமி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்த பொலிசார், சடலத்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் மதுவுக்கு ஆசைப்பட்டு சாந்தகுமார் தனது மகளை சங்கருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த நிலையில் அதன் காரணமாக மகாலட்சுமி கடுமையான மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.
இதையடுத்து தந்தை வயது நபரை திருமணம் செய்து கொண்டோமே என்ற விரக்தியில் மகாலட்சுமி தனது உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்தது
தந்தை வயதுள்ள நபருக்கு தன்னை திருமணம் செய்து கொடுத்ததால் திருமணமான மூன்றே நாட்களில் மணப்பெண் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடுகந்தாங்கலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.