ஜேர்மனி கால்பந்து கிளப் அணியை சேர்ந்த பிரபல வீரர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் உயிருடன் இருப்பதாக தெரியவந்துள்ளதோடு, அவரின் முன்னாள் மனைவி செய்த மோசடியும் வெளிவந்துள்ளது.
Schalke அணியின் முன்னாள் வீரர் Hiannick Kamba (33) கடந்த 2016ல் தனது சொந்த நாடான Congo-வில் இருந்த போது ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரின் முன்னாள் மனைவி நீதிமன்றத்தை நாடி Kamba பெயரில் உள்ள இன்சுரன்ஸ் பணம் தனக்கு தான் வர வேண்டும் என கோரினார்.
இதோடு Kamba-வின் இறப்பு சான்றிதழ் மற்றும் இன்னபிற ஆவணங்களையும் சமர்பித்தார். இதையடுத்து ஆறு இலக்கிலான கோடிக்கணக்கான பெரும் தொகை அவருக்கு வழங்கப்பட்டது.
அதே சமயம் Kamba உயிரிழக்கவில்லை என ஜேர்மனியில் பல பத்திரிக்கைகள் தெரிவித்தன
ஆனால் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் காரணமாக உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்ட Kamba தற்போது உயிருடன் இருப்பதாக அதிகாரபூர்வமாக தெரியவந்துள்ளது.
அவர் ஜேர்மனிக்கு திரும்பியதோடு Gelsenkirchen நகரில் உள்ள நிறுவனத்தில் வேதியியல் தொழில்நுட்ப வல்லுநராகவும் பணிபுரிவது அம்பலமாகியுள்ளது.
இதை தொடர்ந்து போலியாக இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து பணம் பெற்ற Kamba-வின் முன்னாள் மனைவி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் பல மர்மங்கள் மறைந்திருக்கலாம் என கருதப்படும் நிலையில் விரைவில் அனைத்தும் வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.