இஸ்ரேல் அதன் முக்கிய உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் முக்கிய கொரோனா வைரஸ் ஆன்டிபாடியை தனிமைப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இது கொரோனா தொற்றுநோய்க்கு சாத்தியமான சிகிச்சையை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
உயிரியல் ஆராய்ச்சிக்கான இஸ்ரேல் நிறுவனமான (ஐ.ஐ.பி.ஆர்)-ல் உருவாக்கப்பட்ட ‘மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் ஆன்டிபாடி’ நோயாளிகளின் உடல்களுக்குள் நோயை உருவாக்கும் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என்று பாதுகாப்பு மந்திரி நப்தாலி பென்னட் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திங்களன்று பென்னட் ஐ.ஐ.பி.ஆருக்கு விஜயம் செய்தார், அங்கு கொரோனா வைரஸுக்கு மருந்தைக் கண்டுபிடிப்பதில் அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
ஆன்டிபாடி செய்முறை காப்புரிமை பெறுகிறது என்று ஐஐபிஆர் இயக்குனர் ஷ்முவேல் ஷாபிரா மேற்கோளிட்டுள்ளார், அதன் பிறகு சர்வதேச உற்பத்தியாளர் அதை பெருமளவில் உற்பத்தி செய்ய முற்படுவார் என தெரிவித்துள்ளார்.