கொரோனா நோயாளிகளுக்கு 5 விதமான தோல் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ள நிலையில், இது மிகவும் குழப்பத்தை உருவாக்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும், வயது குறைந்த கொரோனா நோயாளிகளுக்கே இந்த அறிகுறிகள் தென்பட்டுள்ளது. மேலும், பல நாட்களுக்கு இந்த பாத விரல்களில் ஏற்பட்ட ஒவ்வாமையும், தோல் சமந்தப்பட்ட பிரச்சனைகளும் நீடிக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னமை பாதிப்பில் ஏற்படுவதுபோல் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல்பாதிப்பு ஏற்படுவது எதார்த்தமானதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு உடையவர்களுக்கு பல வகையில் தோல்பாதிப்பு ஏற்பட்டுள்ளது அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு பட்டியலில் தோல் பாதிப்பு இன்னும் சேர்க்கப்படவில்லை.
கொரோனா பாதிப்புடையவர்களுக்கு கால் விரல்களில் ஏற்படும் தோல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்த இக்னாசியோ கார்ச்சியா டோவல் கூறுகையில், “பெரும்பாலும் கொரோனாவால் ஏற்படும் கால் விரல் பாதிப்பு மக்குலோபாபுல்ஸ் என்று அழைக்கப்படும் தோல் பிரச்சனையாகும். இது உடலில் சில பகுதிகளில் தோன்றும். பெரும்பாலும் கால் விரல்கள் அல்லது கைகளில் இந்த பாதிப்பு ஏற்படும்.
பொதுவாக இந்த பிரச்சனை சுவாசப் பாதிப்பிற்கு பின் தோன்றுகிறது. எனவே இந்த கால் பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பது அவ்வளவு சிறந்தது அல்ல.
இந்த ஆய்விற்கு உட்படுத்தப்ட்ட அனைத்து நோயாளிகளும் சுவாசப் பிரச்சனைகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், பிரித்தானிய ஜர்னர் ஆஃப் டெர்மடாலஜி என்ற சஞ்சிகையில் கொரோனாவால் ஏற்படும் தோல் பாதிப்பு குறித்து ஆய்வு வெளியிட்டுள்ளது.
ஸ்பெயினில் இந்த வாரம் தோல் பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வந்த சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகளின் விவரங்கள் வழங்க கோரி, அனைத்து தோல் மருத்துவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிக்கைபடி 375 பேர் தோல் பாதிப்புடன் மருத்துவர்களை நாடியுள்ளனர்.
குறிப்பிடப்பட்டுள்ள 5 வித தோல் பிரச்சனைகள்
1. கை மற்றும் கால்களில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக வயது குறைவான நோயாளிகளுக்கு இது ஏற்படுகிறது. சுமார் 12 நாட்கள் இந்த பாதிப்பு நீடிக்கிறது. லேசான தொற்றுள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது 19சதவீத நோயாளிகள் இதனால் பாதிப்படைகின்றனர்.
2. கை கால்களில் கொப்புளங்களுடன் அவ்வப்போது அரிப்பு ஏற்பட்டு சிலருக்கு இந்த பாதிப்பு தென்பட்டுள்ளது. இது 10 நாட்கள் வரை நீடித்துள்ளது. கொரோனா வைரஸ்க்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே இந்த அறிகுறிகள் தோன்றியுள்ளன. கிட்டதட்ட 9 சதவீதம் பேர் இதுபோன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. தொட்டால் எரிச்சலூட்டுகிற அரிப்பு, பெரும்பாலும் இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும் தோல் பாதிப்பு. பெரும்பாலும் உள்ளங்கை அல்லது உடலின் பிற பகுதிகளில் இந்த வகை தோல் பாதிப்பு ஏற்படுகிறது.
4. மக்குலோபாபுலெஸ் – சிறிய, தட்டையான மற்றும் சிவப்பு நிறத்தில் தோல் தண்டிப்பாக தோன்றும். 47% பேருக்கு இந்த வகையான தோல் பாதிப்பே இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கான மற்ற அறிகுறிகள் தோன்றிய அதே நேரத்தில் இந்த தோல் பாதிப்பும் இருந்ததாக நோயாளிகள் குறிப்பிடுகின்றனர். இந்த வகையான தோல் பிரச்சனைகள் 7 நாட்களுக்கு நீடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
5. நெக்ரோசிஸ் என்று அழைக்கப்படும் லிவிடோ என்ற நோய் பாதிப்பு 6 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தோலில் சிவப்பு அல்லது நீல நிறத்தில் வலை வலையாக தோற்றம் ஏற்படும். மோசமான இரத்த ஓட்டத்திற்கான அறிகுறியாக இந்த தோல் பாதிப்பு கருதப்படுகிறது. தீவிர கொரோனா பாதிப்பு உள்ள வயது முதிர்ந்த நோயாளிகளுக்கே இந்த வகையான தோல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பல விதமான தோல் பாதிப்புகளை கொரோனா வைரஸ் ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் விளக்கி கூறினாலும், உண்மையில் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கொரோனாவிற்கான அறிகுறியா என்பதை மருத்துவர்களே கண்டறிந்து உறுதிப்படுத்த முடியும்.
எனவே மக்கள் தாங்களாக இது கொரோனா பாதிப்பு என்று கற்பனை செய்து கொண்டு முடிவு செய்ய வேண்டாம்.