கொரோனா நோய் பாதிக்கப்பட்டால், எத்தகைய உணவுகள் பெரியவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் இணையத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்ட தகவல்கள்
போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியம். முறையான சீரான உணவுகள் உண்டால், நாள்பட நோய்களை தவிர்க்கலாம்.
போதுமான, வைட்டமின்கள், மினரல்கள், புரோட்டின்கள் நிறைந்த உணவுகள் உண்பது மிகவும் அவசியம். குறிப்பாக சர்க்கரை, அதிக கொழுப்பு உணவுகள், அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் முக்கியமாக தவிர்த்தல் அவசியம்.
பதப்படுத்தப்படாத, புதிய உணவுகள்
பழங்கள், காய்கறிகள், பருப்புவகைகள், தானியங்கள், சிறுதானியங்கள், ஓட்ஸ், மீன் முட்டை, பால், நல்ல இறச்சிகள் உண்ணலாம்.
அதில், இரண்டு கப் அளவு பழங்கள், 2.5 கப் அளவு காய்கறிகள், 180கிராம் தானியம், 160கிராம் பீன்ஸ், 160 கிராம் இறச்சி வாரத்தில் 1 அல்லது இரண்டு தடவை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இடைபட்ட நேரங்களில் உண்பதற்கு பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவை தேர்வு செய்யலாம்.
அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகள் வைட்டமின்களை குறைக்க செய்யும் தன்மையுடையதால் அளவை கவனத்தில் கொள்ளவும்.
உலர்ந்த பழங்கள், காய்கறிகள் சேர்க்கப்படும் போது உப்பு, சர்க்கரை சேர்க்காமல் உண்ண வேண்டும்.
தேவையான அளவு தண்ணீர் அருந்தவும்.
தண்ணீர் தான் மூலதனம். எனவே போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அது இரத்தத்தின் வெப்பநிலையை கட்டுக்குள் கொண்டு வரும்.
நாள் ஒன்றுக்கு 8முதல் 10 டம்ளர் நீர் அருந்த வேண்டும்.
தண்ணீர் மற்ற குளிபானங்களை விட மிகவும் சிறந்தது. மேலும், பழச்சாறுகளில் சர்க்கரை இல்லாமல் குடித்தால், உடல்நிலையை சரி செய்யும். எலிமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம்.
அளவான கொழுப்பு மற்றும் எண்ணை உணவுகள்
நிறைவுற்ற கொழுப்புகளை (மீன், வெண்ணெய், கொட்டைகள், ஆலிவ் எண்ணெய், சோயா, கனோலா, சூரியகாந்தி மற்றும் சோள எண்ணெய்களில் காணப்படுகிறது) விட நிறைவுறா கொழுப்பு (கொழுப்பு இறைச்சி, வெண்ணெய், பனை மற்றும் தேங்காய் எண்ணெய்கள், கிரீம், சீஸ், நெய் மற்றும் பன்றிக்கொழுப்பு ஆகியவற்றில் காணப்படுகிறது) பொருட்களை உண்ணுங்கள்
வெள்ளை இறைச்சிகளை விட சிவப்பு இறச்சிகளை அதிகம் உண்ணுங்கள்
இறச்சிகளை சமைப்பும் போது அதிக எண்ணை மற்றும் உப்பு பயன்படுத்து சமைப்பதை தவிர்க்கவும்.
குறைந்த அளவில் கொழுப்புகள் உடைய பால்கள் உண்பது சிறந்தது.
ஓட்டல்கள் மற்றும் பாக்கெட் உணவுகளை தவிர்க்கவும்இ குறிப்பாக பீசா, பிஸ்கெட், துரித உணவுகள்.
உப்பு மற்றும் சர்க்கரை அளவு குறைக்கவும்
உணவை சமைக்கும் போது, உப்பு மற்றும் உயர் சோடியம் சார்ந்த பொருட்களை (எ.கா. சோயா சாஸ் மற்றும் மீன் சாஸ்) கட்டுப்படுத்துங்கள்.
உங்கள் தினசரி உப்பு உட்கொள்ளலை 5 கிராம் (தோராயமாக 1 டீஸ்பூன்) க்கும் குறைக்கவும், ஐயோடின் உப்பைப் பயன்படுத்தவும்.