நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 11.30 மணியுடன் 771 ஆக அதிகரித்துள்ளது.
இதில், கொழும்பு மாவட்டத்தில் 152 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடும் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்ட மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்தை தவிர, புத்தளம், கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் ஒரே அளவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் கம்பஹா,புத்தளத்தில் 35 பேரும் களுத்துறையில் 34 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட மாவட்டங்களின் எண்ணி்கையும் படிப்படியாக குறைந்துள்ளது.
இதேவேளை இதுவரையிலும் 9 மாவட்டங்களில் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


















