கொழும்பின் பல இடங்களில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா தொற்றியது எப்படி என இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, ராஜகிரிய, கொலன்னாவ, மோதர ஆகிய பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுக்கு எப்படி கொரோனா தொற்றியதென கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
கொரோனா இலங்கைக்கு பரவியது முதல் வெகு விரைவான காலப்பகுதியில், யார் இந்த நோயாளி, எப்படி நோய் தொற்றியது என்பதனை எங்களால் இலகுவாக கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுடன் பழகிய 71 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் கண்டி பிரதேசத்தில் நேற்று முன்தினம் 64 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களுக்கு எங்கிருந்து தொற்றியதென கண்டுபிடிப்பதற்கு முதல் முறையாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் அதனை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நேற்று நள்ளிரவு வரை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
இன்றைய தினம் நிச்சியமாக கண்டுபிடிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.