கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் நேற்று மாத்திரம், ஒரே நாளில் 2ஆயிரத்து 333 பேர் பலியாகியுள்ளனர்.
உலகளவில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை நிலைகுலையச் செய்துள்ளது.
கொரோனா வைரஸின் பாதிப்பு மற்றும் உயிரிழப்புக்களில் உலகளவில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸின் காரணமாக அமெரிக்காவில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 72ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 12இலட்சத்து 37ஆயிரத்து 633 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.இலங்கை சுகாதார துறை அதிகாரிகளை திணற வைக்கும் கொரோனா வைரஸ்



















