கிண்ணியா , பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அவ்வழியால் மோட்டர் சைக்கிளில் சென்ற இருவரை பொலிஸார் என நினைத்து தப்பிக்க கடலில் பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கிண்ணியா சோலை வெட்டுவான் எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா – 03 மதினா நகர் யுனைதீன் – பாஹீம் (வயது -21) என்னும் இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று இரவு அதே நீரேந்து பகுதியில் சடலமாக மீட்கப்பட்டு, மதீனா நகர் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த இளைஞர் மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது அவ் வழியால் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை பொலிஸார் என நினைத்து மறு கரைக்குச் செல்வதற்காக கடலில் .இறங்கிய இந்த இளைஞர் மாயமாகியுள்ளார்.
இதையடுத்து காணாமல்போன இளைஞனை பொலிஸாரும் , கடற்படையினரும் இணைந்து தேடுதல் மேற்கொண்ட நிலையில் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.