பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் எந்த இரசிய ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் மஹிந்த தேஷப்பிரியவின் மகன் விதுர காஷியப்ப தேஷப்பிரிய வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதற்கு பின்னால் அரச அனுசரணை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அதனை மறுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர், அப்படி செய்திருந்தால் பதவியை இராஜினாமா செய்யவும் தயார் என்றும் கூறியுள்ளார்.