கோடை விடுமுறையை அனுமதிப்பது சாத்தியமா என்பது குறித்து இப்போதைக்கு கூறுவது இயலாத காரியம் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
பிரான்ஸ் இரண்டு மாதங்களாக முடங்கியிருந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தத் தயாராகி வருகிறது.
மார்ச் மாத மையத்தில் பள்ளிகளும் அலுவலகங்களும் மூடப்பட்ட நிலையில், மே 11ஆம்திகதி கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன.
அதே நேரத்தில் தேநீர்க்கடைகளுக்கும் மதுபான விடுதிகளுக்கும் அனுமதியில்லை. மேலும், தங்கள் வீடுகளிலிருந்து 100 கிலோமீற்றருக்கு அதிக தொலைவு பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
கோடை விடுமுறையின் போது கூட சர்வதேச பயணங்களை கட்டுப்படுத்தப்போகிறோம் என்றுகூறியுள்ளார் இமானுவல் மேக்ரான்.
பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, ஐரோப்பாவுக்கு வெளியிலிருந்து வருவோர் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட இருக்கிறார்கள்.
இதற்கிடையில், ஏற்கனவே நாட்டின் சுற்றுலாத்துறை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வைரஸ் இன்னும் இங்கேதான் இருக்கிறது என்று கூறியுள்ள மேக்ரான், நாம் அதைஒழித்துக் கட்டவில்லை என்றார்.
இந்நிலையில், ஊரடங்கிற்குப் பின்னான திட்டங்கள் குறித்து விவாதிக்க நாளைஅமைச்சர்கள் கூட இருக்கிறார்கள்.
இனியும் மக்கள் தொடர்ந்து சமூக விலகலையும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தொடருமாறு மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வளவு நாட்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக் பின்பற்றிய நிலையில், மூன்று வாரங்களுக்குப் பின் மீண்டும் பின்னோக்கி சறுக்கத் தொடங்க விரும்பவில்லை என்கிறார் அவர்.