விசாகப்பட்டினத்தில் ரசாயன வாயுக் கசிவுக்குச் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் இன்று அதிகாலை ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது.
அந்த ரசாயன வாயுவை சுவாசித்த மக்கள் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்கள்.
#VizagGasLeak update @NDRFHQ at work assisting local people & admin on site @PIBHomeAffairs @ndmaindia @vizagcitypolice @vizagcollector @HMOIndia @BhallaAjay26 pic.twitter.com/UnhSOYkosv
— ѕαtчα prαdhαnसत्यनारायण प्रधान ସତ୍ଯ ପ୍ରଧାନ-DG NDRF (@satyaprad1) May 7, 2020
மேலும் பலருக்குச் சுவாசக் கோளாறுகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த, ரசாயன விபத்து தடுப்பு பிரிவினர் கவச உடைகளை அணிந்து கொண்டு, ஆலைக்கு அருகில் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



















