உலகளவில் உள்ள நிலநடுக்கோடுகள் என்று அழைக்கப்படும் டெக்ட்டானிக் தட்டுகளுக்கு அருகில் இருக்கும் பகுதிகள் அதிகளவு நிலநடுக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகிறது.
இந்தோனேசிய நாட்டில் உள்ள பாண்டா கடற்கரைப்பகுதியில் நேற்றிரவு நேரத்தில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் சுமார் 117 கிமீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டுள்ளது.
மேலும், ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகவே, நிலநடுக்கத்தின் காரணமாக அங்குள்ள கிஸார் தீவு பகுதியில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கடுமையாக ஆட்டம் கண்டுள்ளது. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதனைபோல அங்குள்ள பாண்டா கடலில் இருந்து 620 கிமீ தொலையில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் டார்வி நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவிலை என்ற பட்சத்திலும், 450 எரிமலைகள் அப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.




















