ஸ்ரீலங்காவில் நேற்றிரவு வெளியான தகவலின்படி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி நேற்றைய தினம் 26 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.582 நோயாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.232 பேர் குணமடைந்துள்ளனர்.9 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
26 பேரில் அறுவர் கடற்படை வீரர்கள் என்பதோடு மற்றுமொருவர் கடற்படையினருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.