கொரோனா வைரஸ் தொடர்பாக எங்கள் மீது பழி போடுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீனா கடுமையாக எச்சரித்துள்ளது.
சீனாவில் உள்ள வுஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார்.
மேலும், செப்டம்பர் 11 தாக்குதலைவிட மோசமான தாக்குதல் அமெரிக்கா மீது நடத்தப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங் கூறும்போது,
”கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு உண்மைக்குத் திரும்புங்கள்.
பல வெளிநாடுகள், விஞ்ஞானிகள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்திய விவகாரத்தில் எங்களைப் பாராட்டும்போது அமெரிக்கா மட்டும் உண்மைக்கு மாறான தகவல்களை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.