இலங்கையில் ஒரு வயதும் ஒரு மாதமும் நிரம்பிய குழந்தை ஒன்றிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
வெலிசறை முகாமை சேர்ந்த கடற்படை தம்பதியின் குழந்தைக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை, கொரோனா தொற்றில் இருந்து 232 பேர் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில் , 582 பேர் வைத்திய சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,905,453 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இந்த வைரஸ் தொற்று காரணமாக 270,123 பேர் உயிரிழந்துள்ளனர். 1,335,088 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது