கேரளாவில் சகோதரர் ஒருவர் தன்னுடைய கல்லீரலின் ஒரு பகுதியை கொடுத்து சகோதரியை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இருவரும் கடுமையான நிதி நெருக்கடியை கொண்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் திகதி கேரளாவை சேர்ந்த Leena என்பவர் Chennankary-யில் இருக்கும் Kottayam Medical College மருத்துவமனையில் தொடர் வாந்தி மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர் கல்லீரல் வேலை செய்யவில்லை, அவரை காப்பாற்ற வேண்டும் என்றால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே சாத்தியம் என்று கூறி, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர்.
இதனால் உடனடியாக Leena-வின் சகோதரர் Rajesh தன்னுடைய கல்லீரலின் ஒரு பகுதியை சகோதரிக்காக கொடுக்க முன்வந்துள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் அதே மாதம் 30-ஆம் திகதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை காரணமாக Rajesh குறைந்தது ஆறு மாதங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். லீனா தற்போது சகஜ நிலைக்கு திரும்பிவிட்டார்.
ஆனால், இந்த சிகிச்சைக்காக மொத்தம் 25 லட்சம் ரூபாய் ஆகியுள்ளது. இதற்காக இரண்டு குடும்பத்தினரும் கடன் வாங்கியுள்ளனர். ஒரு சிலர் இவர்களின் சிகிச்சைக்காக பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளனர்.
இருப்பினும் தற்போது கடனை அடைக்க வேண்டும் என்பதால், கடும் நெருக்கடியில் உள்ளனர். Leena-வின் கணவர் பாலகிருஷ்ணன் பொலிஸ் அதிகாரியாக உள்ளார்.
இவர் மே இறுதிக்குள் ஓய்வு பெறவுள்ளதால், அந்த ஓய்வுதியமாக கொடுக்கப்படும் பணத்தை வைத்து, இந்த கடனை அடைத்துவிடலாம் என்று நம்பியுள்ளனர்.
ஆனால், அந்த பணம் முழுவதையும் கடன் வாங்கியவர்களுக்கு கொடுத்துவிட்டால், வரும் காலத்தில் சிகிச்சை மற்றும் குழந்தைகளின் படிப்பிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.