ரஷ்யாவை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன்னுடைய கணவனை விவகாரத்து செய்துவிட்டு, 20 வயது வளர்ப்பு மகனை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் Krasnodar Krai மாகாணத்தை சேர்ந்த Marina Balmasheva. 35 வயதான இவர் தன்னுடைய கணவரான Alexey(45)-ஐ விவகாரத்து செய்து, முன்னாள் கணவரின் மகனான 20 வயது மதிக்கத்தக்க Vladimir என்பவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதனால் அவருடன் ஓட்டம் பிடித்துவிட்டதாக கூறப்பட்டது.
Marina Balmasheva ஆரம்பத்தில் எடை அதிகமாக இருந்ததால், அதை எப்படி குறைத்தேன் என்பது குறித்து சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு வந்ததால், அவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கை 417,000-ஆக உயர்ந்தது.
இதனால் இன்ஸ்டாகிராமில் அதிகம் வரவேற்பை பெற்றிருந்த இவர், சமீபத்தில் Vladimir-க்கு 7 வயதாக இருந்த போது தனக்கு 22 வயது அப்போது நான் அவனுடன் இருந்தேன், இப்போது எனக்கு 35, அவனுக்கு 20 வயது இப்போதும் அவனுடன் இருக்கிறேன் என்பது போன்று குறிப்பிட்டிருந்தார்.
ஏனெனில் இவர் இளம் வயது நபருடன் ஓட்டம் பிடித்துவிட்டதாக கூறப்பட்டதால், அனுதாபத்தை இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
ஆனால் இந்த இரண்டு புகைப்படங்களையும் கண்ட இணையவாசிகள், தன் கண்முன்னே வளர்ந்த ஒருவரை எப்படி திருமணம் செய்வது, இது ஒழுக்ககேடான செயல் என்று கூறி வருகின்றனர்.
Marina Balmasheva தன்னுடைய இன்ஸ்டாகிராமில், Alexey-ஐ விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டதால் நான் கிளம்பினேன்.
பல ஆண்டுகளாக நிம்மதியாக இல்லாத வாழ்க்கை இருந்தது. இதனால் Vladimir உடன் சென்றேன். ஏனெனில்,வாழ்க்கை ஒருவருக்கு எப்படி மாறும் என்று உங்களுக்குத் தெரியாது, நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் Vladimir மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படும் Marina Balmasheva அவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.