பிரித்தானியாவில் மிகவும் ஆபத்தான தாவரம் ஹாக்வீட் எனவும், இது உடலில் பயங்கரமான கொப்புளங்களை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை கொண்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், ஒரு சிலர் இந்த ஊரடங்கு உத்தரவை சரியாக கைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதற்கிடையில் அடுத்த வாரம் வானிலை, ஒரு மிதமான வெப்ப நிலையில் இனிமையாக இருக்கும் என்று வானிலை நிலையம் தெரிவித்துள்ளதால், வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்கள், இதற்காக அதிகம் வெளியில் வர வாய்ப்புண்டு, உடன் குழந்தைகளையும் அழைத்து வர வாய்ப்பு உண்டு.
இந்நிலையில், இந்த வெப்ப காலத்தில், அதாவது வெப்ப நிலை அதிகரிக்கும் போது, சருமத்தை எரிக்கக்கூடிய பெரிய நச்சு தாவரங்கள் நாட்டில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக Hogweed என்றழைக்கப்படும் நச்சுத்தாவரம், சுமார் 23 அடி உயரம் வளரும் தன்மை கொண்டது. இதை தொட்டால் பயங்கரமான மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்படுத்துவதோடு, குருட்டுத்தன்மையையும் ஏற்படுத்திவிடும் தன்மை கொண்டது.
PlantTrackers வெளியிட்ட வரைபடத்தில், நச்சு தாவரங்களின் இருப்பு அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக நாட்டின் Gloucestershire, Herefordshire, Somerset மற்றும் பிற கிராமப்புற மாவட்டகளில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
River Trust நிபுணர் ஒருவர் கூறுகையில், இது பிரித்தானியாவில் இருக்கும் மிகவும் ஆபத்தான தாவரம். இலைகள், தண்டுகள், வேர்கள், பூக்கள் மற்றும் விதைகள் அனைத்தும் நச்சுத்தன்மையைக் கொண்டிருக்கும் என்பதால், இந்த செடியைத் தொடக்கூடாது என்று குழந்தைகளுக்கு எச்சரிக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு, Taunton-ன் Somerset பகுதியில் வளர்ந்து வந்த இந்த தாவரத்தை Dean Simmons என்பவர் தொட்டதன் காரணமாக கடும் காயத்தால் அவதிப்பட்டார்.
Hogweed’s-ஐ போன்றே பிராண்ட்ஸ் என்ற தவாரத்தை வெறும் காலால் தொட்டால், அதன் காயங்கள் குணமாக சில மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த தாவரம், நதிகள் மற்றும் கால்வாய்களில் பதுங்கியிருக்கும்.
இதில் sap contains toxic chemicals அதாவது, photosensitising என்று கூறப்படும் நச்சு இரசாயனங்கள் இருப்பதால், அவை மனித தோலுடன் தொடர்பு கொள்ளும்போது ஒளியுடன் வினைபுரிந்து 48 மணி நேரத்திற்குள் கொப்புளத்தை ஏற்படுத்துகின்றன.
இதை தெரியாமல் கண்களில் தேய்த்தால் நிரந்தர குருட்டுத் தன்மை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட எவரும் பாதிக்கப்பட்ட பகுதியை மூடிமறைக்கவும், சூரிய ஒளியுடன் வினை வினைவதைத் தடுக்கவும், சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவும் படி அறிவுறுத்தப்படுகிறது.