லண்டனில் இரவு நேரத்தில் சாலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த நபரின் வழக்கு தொடர்பாக இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பல்ஜித் சிங் (37).
இவர் லண்டனில் வசித்து வந்த நிலையில் வடக்கு லண்டனின் Hayes பகுதியில் கடந்த மாதம் 25ஆம் திகதி இரவு 11 மணிக்கு பொலிசாரால் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
பல்ஜித்தின் பிரேத பரிசோதனை முடிவில் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதோடு அவர் கொடூரமாக தாக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இருவரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரில் ஹெலின் ரேன்ஸ் கூறுகையில், பல்ஜித் கொலை தொடர்பில் 24 மற்றும் 20 வயதுடைய இருவரை கைது செய்துள்ளோம்.
அவர்கள் வடக்கு லண்டனில் உள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம், இது தொடர்பில் எங்களுக்கு உதவிய பொதுமக்களுக்கு நன்றி.
மேலும் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.