கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் அனவைரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளன்னர்.
இதனால், குழந்தைகள் பெற்றுக்கொள்வதை தள்ளிவைத்துல தம்பதியினர் கூட இந்த ஊரடங்கு சமயத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடலாம் எனவும் இதனால், இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு இறுதியில் குழந்தைகள் பிறப்பது பல மடங்கு அதிகரிக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் சுமார் 11 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு இருப்பதாக ஐ.நா. வின் குழந்தைகள் நிதி அமைப்பு கூறியுள்ளது.
மேலும், இந்தியாவில் மட்டும் டிசம்பர் 16 ஆம் தேதிக்குள்ளாக 2 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.