ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு, மீண்டும் நாடு வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பொது மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சில முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தனது சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 2020 மார்ச் 18ம் திகதியிலிருந்து இலங்கை முழுதுமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
அதிக ஆபத்து நிறைந்த பகுதிகள் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது டன், இலங்கையின் பிரதான வியாபார நகரமாகிய கொழும்பு நகரின் வியாபார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற, நாம் சுகாதார மற்றும் பொருளாதார ரீதியில் பலம் பெற்றிருக்க வேண்டும். மீண்டும் வேலைக்குச் செல்லும் உங்களுக்கு உதவும் வகையில் சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பிற அமைப்புகள் நிறைய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.
அவற்றை முழுமையாக பின்பற்றி உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், இந்த நாட்டின் குடிமக்களையும் இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபட உதவுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.