ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 863ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து 321 பேர் வெளியேறியுள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. இந்நிலையில் பொது மக்கள் அனைவரும் சுகாதார விழுமியங்களை கடைப்பிடித்துச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


















