ஆப்கானிஸ்தானில் கொரோனா நிவாரணம் கோரி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர், 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள கோர் மாகாணத்தில் அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் பெரோஸ் கோவில் உள்ள கவர்னர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைதியாக தொடங்கிய இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.
போராட்டக்காரர்களில் சிலர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து பொலிஸாரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.