பிரித்தானியாவில் அமல்படுத்தப்பட்ட விதிகளுக்கு கீழ் படிய வேண்டும் என்றும், சமூக இடைவேளை நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு அபராதம் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஊரடங்கு குறித்த புதிய திட்டங்களை பற்றி அறிவிப்புகளை இன்று அறிவித்து வருகிறார்.
அதில் அபராதம் விதிப்பது குறித்தும் பேசியுள்ளார். பிரித்தானியாவின் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சமூக இடைவேளை தொடர்பான விதிகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும், அந்த விதிகளை அமல்படுத்தினால், அவற்றை உடைக்கும், அதாவவது மீறும் சிறு சிறுபான்மையினருக்கு அபராதம் அதிகரிப்போம்.
கொரோனா வைரஸின் பரவலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய விதிகளின் கீழ், ஊரடங்கின் விதிகளை யாராவது புறக்கணித்தால், காவல்துறையினர் £60 அபராதம் விதிக்கலாம்.
ஆனால் அது இப்போது, £100-ஆக இருக்கும், அதை 14 நாட்களுக்குள் செலுத்தப்பட்டால் £50, அதாவது பாதியாக குறைய வாய்ப்பிருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த விதிமுறைகளை தொடர்ந்து மீண்டும், மீண்டும் மீறினால் ஒவ்வொரு குற்றத்திற்கு அந்த அபராதம் இரு மடங்காகி 3,200 வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.