தமிழகத்தில் குளிர்பானத்தில் போதை பொருட்களை கலந்து கொடுத்து பெண்களை சீரழித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பேரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து அழைப்பு வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து ஆபாச எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, அவரிடம் பேசிய வாலிபர் ஒருவர், என்னிடம் பணம், நகைகள் ஏராளமாக உள்ளது. அதை உனக்கு தருகிறேன். நான் சொல்வதை கேட்க வேண்டும் என்று அவரை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார்.
இதனால் அம்மாணவி உடனடியாக காவல்நிலையத்தில் இது குறித்து புகார் கொடுக்க, பொலிசார் வழக்கு பதிவு செய்து, இதில் தொடர்புடைய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொலிசார் கூறுகையில், மதுரை தல்லாகுளம் பகுதியில் ரெஸ்டாரண்ட், டிரேடர்ஸ் மற்றும் செல்போன் கடை நடத்தி வரும் 3 வாலிபர்கள், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளியைச் சேர்ந்த விடுதி மாணவிகளை குறி வைத்து பிடித்துள்ளனர்.
கடைகளுக்கு வரும் மாணவிகளின் செல்போன் எண்களை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியும், செல்போனிலும் தொடர்ந்து பேசியும் வந்துள்ளனர். அதன் பின்னர் அவர்களை நேரில் வரவழைத்து, பணம், பிரியாணி உட்பட அறுசுவை உணவுகளை கொடுத்து ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர்.
நன்றாக பழகிய பின்னர், அவர்களை ஊர் சுற்றுவதற்காக வெளியில் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
மேலும், குளிர்பானங்களில் போதை மாத்திரைகளை ரகசியமாக கலந்து கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி, அவர்களை தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, விடுதியில் இருக்கும் மாணவிகளுக்கு உணவுப்பொருட்கள் பார்சல் கொடுப்பது போல் மது பாட்டில்களை கொடுத்தும், சில மாணவிகளை மயக்கியும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
தொடர்ந்து இந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். இதில் யாரெல்லாம் தொடர்புள்ளனர் என்ற பட்டியலை தயாரித்து வருகிறோம்.
இவர்கள் கடந்த 3 வருடமாக இதே வேளையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி, நாகர்கோவில் காசியை தொடர்ந்து மதுரையிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.