இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் நேற்று பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 863ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 16 பேரில் 13 கடற்படைச் சிப்பாய்கள் அடங்குகின்றனர். ஒருவர் கடற்படைச் சிப்பாயுடன் நெருக்கமாகப் பழகியவர் மற்றும் டுபாயிலிருந்து நாடு திரும்பிய இருவரும் அடங்குகின்றனர்.
இதுவரை 321 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் நாட்டில் கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.


















